அகில மொழி சீரமைப்பாளர் பற்றிய பலமுறை கேட்கபடும் கேள்விகள் (ப.கே.கே)

 

சீரமைப்பாளரை இயக்கிட அடிப்படை தேவை என்ன?
உங்கள் கணினியில் எடிட்டரை இயக்கிட அடிப்படையாக இண்டிக் மொழிகளின் நிறுவல் மற்றும் அந்த எழுத்துருவும் தேவை. விபரம் அறிய  
இங்கு சொடுக்கவும்.  

தமிழ் மின்அஞ்சல், தமிழ் சீரமைப்பில் இல்லாதது இதில் இருப்பது என்னென்ன?
அகில மொழி சீரமைப்பாளரில் பல பண்புக்கூறுகள் உள்ளன. (அ) முதலாவது பன்மொழி - தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆகியன அடங்கும். இதில் பிறமொழிகளும் விரைவில் சேர்க்கப்படவுள்ளன. (ஆ) உலகிலேயே முதலாவதாக திரையிலேயே காணக்கூடிய விசைப்பலகை அமைப்புடன் வெளியீடு. இதுவே இன்றும்கூட அனைத்து சொற்செயலி ஆக்குவோர்களால் செந்தரமாக ஏற்பு. (இ) TSCII, TAB சார்ந்த கோப்புகளை இதில் திறந்து விட வாய்ப்புள்ளதால் தமிழ்மின்அஞ்சல், தமிழ் சீரமைப்பு இரண்டுடனும் இசைவுடையது எனலாம். (ஈ) இங்கிருந்தபடியே பலமொழிகளில் எழத்துரு இன்றி மின்அஞ்சள் அனுப்பும் வசதி.

இதில் எவ்வகையான விசைப்பலகை செந்தரம் பின்பற்றப்படுகிறது?
அகில மொழி சீரமைப்பு விசைப்பலகையில் மிக எளிதாக எலியை சொடுக்கி அமைப்பை தேர்வு செய்துவிடலாம். டீஓஈ, கோத்ரெஜ் தட்டச்சு வகை, ஒலிப்பியல் வகை ஆகிய மூன்றையும் செந்தர அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர Shift , Capslock சாவிகளையும் சாதாரணமாக உபயோகிக்கலாம். ஆங்கிலம் தவிர நான்கு இந்திய மொழிகளின் விசைப்பலகை அமைப்புடன் இது உள்ளது. திரையில் மிகச்சிறிய இடத்தை எடுத்துக்கொள்வதுடன் அல்லாமல் விருப்பம்போல் நகர்த்தக்கூடிய வசதியும் பொருந்தியது.

ஒலிப்பியல் வகை விசைப்பலகையைப் பற்றி விளக்குக?
ஒலிப்பியல் வகை என்பது நீங்கள் தமிழ் வார்த்தைகளை எவ்வாறு ஆங்கிலத்தில் எழுதுவீர்களோ அதுவே ஆகும்.  சீரமைப்பாளர் தானாகவே இவ்வார்த்தைகளை சரியான தமிழ் வார்த்தைகளாய் மாற்றி திரையில் உடனுக்குடன் காண்பிக்கும். உதாரணத்திற்கு, ராமகிருஷ்ணா என்ற பெயரை, rAmakrishnA என்ற முறையில் அடிக்கலாம். இதில் முக்கியமாக சொற்களை உச்சரிக்கும் அடிப்படையில் சிறிய அல்லது பெரிய எழுத்தக்களை(Capslock) கவனத்துடன் தேர்வு செய்வது மிக அவசியம். இதுவே இந்தியில் रामक्रिश्ना என்றும் கன்னடத்தில் ರಾಮಕ್ರಿಶ್ನಾ என்றும் திரையில் வரும்.

இதில் மின்அஞ்சல் அனுப்பினால் எழுத்துரு அனுப்ப தேவையா?
தேவையில்லை என்பதே இதன் சிறப்பு. பெறுநரின் கணினியில் விண்டோஸ் 2000 அல்லது விண்டோஸ் XP இருந்தால் போதும். வந்த மின்அஞ்சலைப் படித்துவிடலாம்.

இது விண்டோஸ் 95, விண்டோஸ் 98, விண்டோஸ் ME ல் இயங்குமா?
இயங்காது. ஏனெனில் இது இயங்க இந்திய மொழிகளின் பயன்பாட்டு தேவை. இவற்றில் இல்லை. விண்டோஸ் 98 SE, விண்டோஸ் ME இவற்றில் இந்திய மொழிகளின் பயன்பாட்டு ஏற்றப்பட்டால் அகில மொழி சீரமைப்பிலிருந்து அனுப்பிய மின்அஞ்சலைப் படிக்கலாம்.

இது லினக்ஸில் இயங்குமா?
சமீபத்திய லினக்ஸ் கெர்னல் யுனிகோடை ஏற்கிறது. விரைவில் லினக்ஸிலிம் ஆக்கும் பணியில் ஈடுபடுவோம்.

 கம்பன் மென்னியத்திற்கு நான் எவ்வாறு உதவலாம்?
நிச்சயமாக உதவலாம். கம்பன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சில வல்லுநர்கள் எங்களுக்குத் தேவை. நீங்கள் செய்நிரலர், செய்நிரல் பரிசோதகர், தரவு பதிவாளர், எழத்துரு உருவாக்குபவர் மற்றும் இந்திய மொழிமாற்று வித்தகர் - இவற்றில் ஏதேனும் ஒரு திறனுடன் சேர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பீர்களானால் எங்கள் கம்பன் அணியில் சேர வாய்ப்பளிக்கிறோம். நீங்கள் support@kamban.com.au  என்ற மின்அஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.