தமிழ் சீரமைப்பாளர் ஆதரவு

 

[தமிழ் விசைப்பலகை]  [தமிழ் மின்அஞ்சல்]  [கம்பன் சொற்செயலி 3.0]

 

பதிவிறக்கும் முறைகள்:

 
 

மேலே குறிப்பிட்ட இணையத்தில் சென்று பதிவிறக்கும் போது, கோப்பு - காப்பு அல்லது ஓட்டம் (File - Save or Run) என்ற இரு வினா எழும்பும்.

நீங்கள் காப்பு என்பதை தேர்ந்தெடுக்கவும் (ok). வரும் உரையாடல் பெட்டியில் (dialogue box), திரை மேசையை(desktop) தேர்ந்தெடுக்கவும். பதிவிறக்கும் பணி முடிந்த மட்டில், கணினி திரை மேசையில் SETUPTBE.EXE என்ற புதிய குறும்படம்(icon) ஒன்றைக் காணலாம். அதை இரட்டைசொடுக்கு(doubleclick) செய்து தமிழ் சீரமைப்பாளர் நிரலை நிறுவிக்கொள்ளவும்.

இதன் பின் தொடக்கம் மற்றும் ஓட்டம் (Start and Run) என்பதை தேர்ந்தெடுத்து control fonts என விசைப்பலகையில் அடிக்கவும். பின் ok ஐ சொடுக்கினால் எழத்துரு உறையை திரையில் காண்பீர்கள். அதனுள் TAMMaduram, TABMaduram என்ற இரு எழத்துருவும் உள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளவும். பின் காட்சியை முடவும். நிறுவல் முறை அவ்வளவே.

இனி இந்நிரலை இயக்கி தமிழில் உரைகள் இயற்றிட Start, Program, Kambansoftware ல், Tamileditor ஐ சொடுக்கவும்.

 
  உரை இயற்ற சில வழிமுறைகள்:  
 

உதாரணமாக கோடி என்ற சொல்லை அடிக்க: கோடி
முதலில் (- க்கு சாவி<H>) பின் (-க்கு சாவி<X>), பின் ( - க்கு சாவி<O>), பின் ( - க்கு சாவி<S>).
அதாவது உயிர்மெய் எழுத்துக்களை அடிக்க முதலில் மெய்யெழுத்துக்களை அடித்து (
க,ங,ச,ஞ) அதன்பின் உயிர்எழுத்துக்களை(ஆ,இ,உ,ஓ) அடிக்கலாம்.

உதாரணங்கள்:
கா->க+ஆ
கி->க+இ
கு->க+உ
கை->க+ஐ
கொ->க+ஒ
கோ->க+ஓ
கௌ->க+ஔ

விசைப்பலகையில் பல்வேறு சாவிகளின் அமைப்பை அறியும் பொருட்டு விசைப்பலகையின் காட்சி நிரலைத் திறக்கும் போதே காண்பீர்கள். காணவில்லையெனில் <F2> ஐ அமுக்குங்கள்.

 
     
     
  தமிழில் மின்அஞ்சலை அனுப்ப / பெற - பலமுறை கேட்கபடும் கேள்விகள் என்ற பகுதியைப் பாருங்கள்.