|
கே |
எனக்கு ஒரு
சந்தேகம். ஒரு வேளை நம்மை அறியாமல், தவறுதலாக உச்சரிக்கப்பட்ட சொல்லை
தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டு விட்டால், பின் அத்தவறை அகராதியின்
தரவுத்தளத்தில் சென்று திருத்த வழியுள்ளதா? - கே.கோபால். |
|
ப |
தமிழ்
அகராதியின் கோப்புகள், KWP எங்கு நிறுவப் பெற்றுள்ளதோ, அதாவது
C:\Program Files\Kamban Software\KWP என இருப்பதை காண்பீர்கள். TUSER.D
எனும் கோப்பானது தமிழ் அகராதி உபயோகிப்பாளருக்கும், EUSER.D எனும்
கோப்பானது ஆங்கில அகராதி உபயோகிப்பாளருக்கும் ஆகும். இக்கோப்புகளை
நீங்கள் KWPயிலேயே உரைகோப்பாக திறக்கலாம். திறந்த கோப்பில் சென்று சொல்
திருத்தல், நீக்கல் செய்ய வழியுண்டு. செய்தபின் அக்கோப்பை அதே பெயரில்
காப்பு செய்யலாம். ஒவ்வொறு சொல்லையும் (,) வினால் தனித்து வைத்துள்ளதை
காண்க. |
|
|
|
கே |
மற்ற
பொதிகளைப் போன்று கம்பனிலும் திரையிலேயே காணக்கூடிய விசைப்பலகை இடஅமைவு
உள்ளதா? |
|
ப |
'கம்பன்
மென்னியம்'-ன் தமிழ்சொற்செயலி KWP3.0, மற்றும் மின்அஞ்சல்களான TMAIL,
TBEdit ஆகிய அனைத்திலும் திரையிலேயே காணக்கூடிய விசைப்பலகை இடஅமைவு உள்ளது.
ஒவ்வொறு சொல்லையும் நீங்களாகவே எலியால் சொடுக்கிப் பார்த்து தமிழில்
தட்டச்சு செய்யக் கற்றுக் கொள்ளலாம். |
| |
|
|
கே |
11.3.2000
அன்று சென்னையில் KWP3.0 வாங்கினேன். எழுத்தாளர் ஆகிய நான் கண்ணுற்றது
என்ன வென்றால், KWP யில் ஒரு உரையை இயற்றி 'ரிச்டெக்ஸ்ட்' எனும் உரையில்
காப்பு செய்தபின், அதை 'பேஜ்மேக்கர்' ல் திருத்த இயலவில்லை. எனவே
கம்பன்சொற்செயலியை முழுதாக பயன்படுத்த முடியவில்லை. சற்றே உதவுக -
ச. குணசீலன். |
|
ப |
KWP3.0 ல்
அனைத்து மேசைப்பதிப்பு(desktop publishing)க்கு உகந்த பண்புக்கூறுகள்
உள்ளன. எனவே தட்டச்சு செய்ய, மற்ற சொற்செயலியின் உதவி தேவையில்லை. ஆனால்
வேறு மென்பொருளை உபயோகித்து செய்தவற்றுக்கும்கூட KWP ல் சென்று
திருத்தம் செய்ய வேண்டும். இது KWP இன் குறை ஆகாது. ஏனெனில் எழுத்துரு
குறியீடாக்கியின்(encoding) பண்பின் காரணமாக சாதாரண கணினி விசைப்பலகையைக்
கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய இயலாது. KWP இல் உள்ள ஒரு இயக்கியானது
நீங்கள் தட்டச்சு செய்யச்செய்ய குறியீடுநீக்கி(decoder) வசதியுடன், அதனை
ஒத்த வார்த்தைகளை தமிழில் காண்பித்து விடும்.
பின்குறிப்பு - KWP ல் ஒன்பது TAM வகையான எழுத்துரு
உள்ளன. TW என முடியும் அவை BarathiTW, MaduramTW போன்றன. இவற்றைக்
கொண்டு மற்ற பயன்பாட்டுகளிலும் தமிழ் சொற்களை இயற்றிட, விசைப்பலகை
இடஅமைவு KWP ல் உள்ளது ( தட்டச்சு வகை இடஅமைவு). எனினும் இவ்வகை
எழுத்துருக்கள் அவ்வளவு எளிதல்ல என்பதால் இதனை மேசைப்பதிப்பு வேலைகளுக்கு
நாங்கள் பரிந்துறை செய்யவில்லை. |
|
|
|
கே |
கம்பனின்
புதிய KWP பதிப்பு வாங்கியுள்ளேன். என் பெயரை உங்களிடம் பதிவு செய்ய என்ன
செய்யனும் - திருமதி. மங்கை. |
|
ப |
நன்றி.
நீங்கள்
இங்கே சொடுக்கி உங்கள் பெயர் மற்ற விவரங்களுடன் பதிவு செய்யது
கொள்ளலாம். |
| |
|
|
கே |
கம்பனின்
KWP ஐ ஒவ்வொரு முறை இயக்கும்போதும் தவறு - "KWP performed an illegal
operation" காரணமாக இயக்கம் நின்று விடுகிறது. KWP ஐ மறுமுறை நிறுவியும்
பலன் இல்லை. தங்களின் அறிவுரை என்ன? |
|
ப |
KWP
யில் சிறிய பதிவக பிரச்னை உள்ளது. கணினி திரையின் ஒளித்தோற்றக்
காட்சி(video control) மற்றும் பிரிதிரனை(resolution) மாற்ற முற்பட்டாலோ
இப்பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும். திரையில் "This program has
performed an illegal operation and will be shut down. If problem
exists, contact the program vendor" என்ற தகவல் வரும்.
இதை தீர்க்கும் வழி -
1. "Regedit" ஐ திறக்கவும். ( Start / Run / type "Regedit" and press OK
)
2. அதில் Ctrl + F என விசையில் பிடித்து, Find what என்ற புலத்தில்
Kamban Word Processor என தட்டச்சு செய்யவும்.
3. Match whole string only என்பதை தேர்வுசெய்து, Find next என்பதில்
சொடுக்கவும். சிறு விநாடியிலேயே சுட்டியானது(cursor) இடது
சாளரப்பிரிவில்(pane) உயர்த்திக் காட்டும்.
4. உடன் Delete சாவியை அழுத்திடவும், ஒரு வினா "Are you sure you want to
delete this key" எழும்பியவுடன், yes என்பதில் சொடுக்கவும்.
5. பின் F3 சாவியை அழுத்தவும். மீண்டும் தேடுதல் ஆரம்பமாகும். மறுமுறை
Kamban Word Processor கண்டெடுத்தால் அதையும் முன்போலவே நீக்கிடவும்.
6. பின் Finished searching the registry என வந்தால் ok செய்து மூடவும்.
நீங்கள் எதிர்கொண்ட பிரச்னை தீர்ந்துவிடும்.
|
| |
|