| |
உங்கள் நண்பர்
அனுப்பிய இணைப்பு(attachment) இல்லா மின்அஞ்சலைக் காண:
தமிழ்மெயில்
(TMAIL) என்பது என்ன? திரையில் காணும் சொற்கள் பயனில்லாத குப்பை
வார்த்தைகளாய்(junk characters) ஏன் உள்ளது?
பிற அஞ்சல்
கோப்பு போலவே தமிழ்மெயிலும் உரைகோப்பு(text file) முறையிலேயே உள்ளது. TMAIL,
TBEdit கோப்புகளை நோட்பேட் போன்ற எந்த எடிட்டரிலும் திறக்கலாம். எனினும்
எழுத்துரு வித்தியாசப்படுவதால் அது தமிழ்சொற்களாகத் தெரியாது. ஆக எழுத்துருவே
இதற்கான முக்கிய காரணம் என்று அறிக!
TMAIL ல் இரு எழுத்துரு வகை, அதாவது - MaduramTSC சீரமைப்பு (Editor) பணிக்கும்,
Maduram பட்டிவழி (Menu) பணிக்கும் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் TBEdit ல் இரு
எழுத்துரு வகை, அதாவது - TABMaduram சீரமைப்பு பணிக்கும், TAMMaduram பட்டிவழி
பணிக்கும் உருவாக்கப்பட்டுள்ளன. TMAIL ல் TSC என்று முடியும் எல்லா
எழுத்துருவின் மூலமும் தமிழில் செய்திகளைப் படிக்கலாம். அதேபோல் TBEdit ல் TAB
என்று தொடங்கும் எல்லா எழுத்துருவின் மூலமும் தமிழில் செய்திகளைப் படிக்கலாம்.
உங்களுக்கு TMAIL வழியாக கிடைத்த மின்அஞ்சல் தமிழில் இல்லை என்றால், உடன்
MaduramTSC எழுத்துருவை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளவும். அம்மாதிரியே TBEdit
வழியாக கிடைத்த மின்அஞ்சல் தமிழில் இல்லை என்றால், உடன் TABMaduram எழுத்துருவை
தேர்வு செய்து மாற்றிக்கொள்ளவும்.
பயன்பாட்டில்(application) எழுத்துருவை மாற்றும் முறையை விளக்குக
கணினியில் ஒவ்வொரு பயன்பாட்டும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் எழுத்துரு நிறுவல்
மற்றும் உபயோகித்தலும் சற்றே விநோதமான வகையில் தான் உள்ளது. உதாரணமாக,
(அ) மைக்ரோஸாஃப்ட் அவுட்லுக், மைக்ரோஸாஃப்ட் எக்ஸ்சேஞ்ஜ் மற்றும் அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் (இன்டெர்னட் எக்ஸ்ப்ளோரர் உடன்) போன்றவற்றில் தமிழில் வரும்
அஞ்சல்கள், குப்பை வார்த்தைகளாய் இருந்தால் அதனை கீழ்கண்ட வழியில் சரிசெய்யலாம்.
அனைத்து உரையையும் உயர்த்திக்காட்டி(highlight) <Ctrl>, <a> ஐ சேர்த்து
அடிக்கவும். பின் எலியை(mouse) உபயோகித்து பட்டிவழியில் படிவம்(format) /
எழுத்துருவை தேர்வு செய்து வரும் பட்டியலில் MaduramTSC க்கு மாற்றி ok செய்து
தமிழில் சொற்களை காணமுடிகிறதா என பார்க்கவும்.
மேற்குறிப்பிட்ட முறையிலேயே TBEdit லும் கடைபிடிக்கவும். இதன் எழுத்துரு
TABMaduram என்பதை நினைவில் வைக்கவும். நீங்கள் இந்த எழுத்துருக்களை எங்கள்
இணையமுகவரி http://www.kamban.com.au/ சென்று இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
TMAIL, TBEdit ஐ பதிவிறக்கும் போது இந்த எழுத்துருக்கள் தாமாகவே உங்கள்
கணினியில் நிறுவை பெற்றுவிடும்.
(ஆ) நெட்ஸ்கேப் மெஸெஞ்ஜர் (நெட்ஸ்கேப் நேவிகேடர் உடன்)போன்றவற்றில் எழுத்துருவை
மாற்ற படிவபட்டிவழியில்(format menu) / எழுத்துரு ஐ தேர்வு செய்யவும்.
வெப் சார்ந்த மின்அஞ்சல் சேவையை ( யாஹு, ஹாட்மெயில்) பயன்படத்துவோர்
செய்யவேண்டியது என்ன?
உதாரணமாக ஹாட்மெயில் மூலம் தமிழில் வரும் அஞ்சல் குப்பை வார்த்தைகளாய் இருந்தால்,
அச்சொற்கள் அணைத்தையும் நகல்(copy) எடுக்கவும். இதற்கு விசைப்பலகையில் <Ctrl>
<a>, பின் <Ctrl> <c> கொட்டவும். பின் TMAIL, TBEdit இவற்றில் ஏதேனும் ஒன்றில்
நகலை மறுபதிவு (paste)செய்யவும். இதற்கு விசைப்பலகையில் <Ctrl> <v> கொட்டவும்.
TSCII ஒத்த எழுத்துருவை TMAIL லிலும், TAB ஒத்த எழுத்துருவை TBEdit லும்
படிக்கலாம். சந்தேகம் நீங்கிட TMAIL, TBEdit இரண்டிலும் நகலை மறுபதிவு செய்து
சரிபார்க்கவும். ஏதேனும் ஒன்றில் தமிழ் சொற்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.
முரசுஅஞ்சல் மூலம் கிடைத்த செய்தியை எவ்வாறு படிப்பதாம்?
முரசுஅஞ்சல் TSCII, TAB ஆகிய இரு எழுத்துருவையும் ஒத்து உள்ளதால்,
மேற்குறிப்பிட்ட முறையிலேயே இதிலும் மின்அஞ்சல் உறையை மாற்றி அமைத்து தமிழில்
படிக்கலாம்.
உங்கள் நண்பர் அனுப்பிய இணைப்பு உள்ள மின்அஞ்சலைக் காண:
நண்பர் அனுப்பிய இணைப்பு உள்ள மின்அஞ்சலை படிக்க இயலவில்லை. என்ன
செய்யலாம்?
தற்போது வெளிவரும் அனைத்து மின்அஞ்சல்களும் TSCII, TAB சார்ந்த எழுத்துருவையே
கொண்டுள்ளன. ஆனால் சிற்சில அரம்பகால எழுத்துருக்கள் இதற்கு ஒவ்வாததால்
அவ்வெழுத்துருவையே உபயோகிக்கும் அவசியம் உள்ளது(ஆனால் இன்று இது மிகவும் குறைவே).
எவ்வித விஸ்தாரமும்(extension) இல்லாத கோப்புகளை நோட்பேடில் திறக்க
முயற்சிக்கவும். பின் மேற்குறிப்பிட்ட முறையியையே பின்பற்றி சரிபார்க்கவும்.
அநேகமாக சரியான பலன் கிடைக்கும்.
.TMF விஸ்தரிப்புடன் வந்த இணைப்பு உள்ள மின்அஞ்சலை எவ்வாறு திறந்து
படிப்பது?
வந்த
.TMF ன் மேல் எலியால் இரட்டை சொடுக்கு செய்யவும். திரையில் TMAIL திறக்கப்பட்டு
உரையை படித்து விடலாம். TMAIL ஐ
http://www.kamban.com.au/ பதிவிறக்கிக்கொள்ளவும்.
.TBE விஸ்தரிப்புடன் வந்த இணைப்பு உள்ள மின்அஞ்சலை எவ்வாறு திறந்து
படிப்பது?
வந்த
.TBE ன் மேல் எலியால் இரட்டை சொடுக்கு செய்யவும். திரையில் TBEdit
திறக்கப்பட்டு உரையை படித்து விடலாம். TBEdit ஐ
http://www.kamban.com.au/
பதிவிறக்கிக்கொள்ளவும்.
யாஹு, ஹாட்மெயிலில் வந்த இணைப்பு உள்ள மின்அஞ்சலை எவ்வாறு திறந்து
படிப்பது?
ஹாட்மெயிலில் வந்த இணைப்பை உங்கள் கணினி வன்தட்டில் நகல் செய்து பின் திறக்க
முயற்சிக்கவும்.
மின்அஞ்சலை அனுப்பிடும்
முறைகள்:
நண்பருக்கு இணைப்பு இல்லா மின்அஞ்சலை அனுப்பிடும் முறை என்ன?
தமிழில் அஞ்சலை
இணைக்காமல் அனுப்புவது உகந்ததல்ல, ஏனெனில் உங்கள் நண்பருக்கு TBEdit / TMAIL -
எதில் அனுப்பப்பட்டது என அறிய வாய்ப்பில்லை. நேரடியாக தமிழில் அஞ்சல் அனுப்ப,
வேண்டிய உறையை இயற்றியபின் அதை நகல் எடுத்து ஹாட்மெயிலில் அதை மறுபதிவு
செய்யலாம். ஒருவேலை சொற்கள் குப்பையாகத் தென்பட்டாலும் கவலை வேண்டாம். உங்கள்
நண்பர் தன் கணினியில் அதை சரியான எழுத்துருக்கு மாற்றிக்கொண்டு விடலாம்.
நண்பருக்கு இணைப்பு உள்ள மின்அஞ்சலை அனுப்பிடும் முறை என்ன?
தமிழில் இதுவே
எளிதான மற்றும் சரியான முறை என்பதில் ஐயமில்லை. முதலில் TBEdit / TMAIL ல்
ஆவணத்தை தயார் செய்து வைத்து அதை ஒரு கோப்பு பெயரிட்டு காக்கவும். பின்னர்
உங்கள் கணினி மெயில் மெசெஞ்சரை திறந்து அதில் நண்பரின் மின்அஞ்சல்முகவரி மற்றும்
தலையங்கம் கொடுத்து, தயாரித்து வைத்துள்ள உறையை இணைப்பு செய்து அனுப்பவும்.
நண்பருக்கும் அதை பெற்று படிப்பது மிக எளிது.
TMAIL
/ TBEdit லிருந்து அஞ்சல் அனுப்பிடும் முறை என்ன?
TMAIL /
TBEdit இரண்டிலும் கோப்பு, மின்அஞ்சல் பட்டிவழியைக் காணலாம். அதை
சொடுக்கியவுடன் உரையாடல் பெட்டி ஒன்று திறக்கும். அதில் default மற்றும் ok
கொட்டவும். அப்பொழுது உங்கள் மெயில் மெசெஞ்சர் திறக்கப்பட்டு அதில் உங்கள்
கோப்பு இணைப்பாகக் காட்டப்படும். அதில் நண்பரின் மின்அஞ்சல்முகவரி மற்றும்
தலையங்கம் கொடுத்து அனுப்பவும். இம்முறையில் யாஹு, ஹாட்மெயில் போன்றவைகளில்
அனுப்பமுடியாது. |
|