கந்தர் சக்ஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும் நிஷடையுங்கை கூடூம் நிமல ரரூள்கந்தர் சக்ஷ்டி கவசந்தனைஅமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாட மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செயும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வென்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவன பவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிற நிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாறு மிளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி பையும் நிலைபெற் றென்முன் நித்தமுமொளிரும் சன்முகன் றீயும் தனியொளி யொவ்வும் குன்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்நெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்ன பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகநக நகென டிகுடிண டிகுடிகு டிகுகுன டிகுன ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடுகு டிகுடிகு டங்கு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் முந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனனயாளும் ஏரகச் செல்வ னமந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் ன்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க விதிசெவி யிரன்டும் வேலவர் காக்க நாசிக ளிரன்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரன்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிறன்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத் தொடையிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழ்ந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருனைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் காக்க எப்பெழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியி னோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூன்யம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களை தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளங்களும் எண் பெயர் சொல்லவும் இடிவிழந்தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஓட்டியச் செருக்கும் ஓட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதுமஞ் சனமும் ஓருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூட தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டு உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியுங் கரடியும் எனைத்தொடாதோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கன் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைக்ஷயங் சூன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனை கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாளரசரும் மகிழந்துற வாகவும் உன்னை துதிக்க உன்திரு நாமம் சரஹண பவனே சைலொனி பவனே திரிபுர பவனே திகழெுாளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனை பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக அடினே னாடினேன் ஆவீனன் பூதியை தேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலாயுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற வாழ்க வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்யினும் பெற்றவ னீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பின்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னானும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உவந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெழுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாய்க் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்குரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமி வீரலட் சுமிக்கு விருந்துண வாக சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன் துன்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரிக் கனக சபைக்கோ ரரசே மயினட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரஹண பவஓம் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்