கடவுள் வாழ்த்துக்கள். இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித் தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய் உள்ளொளி யாகி உலகெலாந் திகழும் பரம் பொருளேயோ? பரம் பொருளேயோ? ஆதிமூமே? அனைத்தையும் காக்கும் தேவ தேவா! சிவனே கண்ணா வேலா! சாத்தா! விநாயகா! மாடா! இருளா! சூரியா! இந்துவே சக்தியே! வாணீ காளீ! மாமகளேயோ! ஆணாய் பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே வேதச்சுடரே! மெய்யாங் கடவுளே! அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்; நோவு வேண்டேன், நூற்றாண்டு வேண்டினேன்; அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்; வேண்டா தனைத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. இறைவனை வேண்டுதல். ராகம்- தந்யாசி. பல்லவி. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா! இறைவா! இறைவா! ஓ--எத்தனை சரணங்கள். சித்தனை அசித்துடன் இணைத்தாய் - அங்கு சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய். அத்தனை யுலகமும் வர்ணக்களஞ்சிய மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். ஓ--எத்தனை முக்தியென் றோருநிலை சமைத்தாய் - அங்கு முழுதினையு முணறும் உணர் வமைத்தாய் பக்தியேன் றொருநிலை வகுத்தாய் - எங்கள் பரமா! பரமா! பரமா! ஓ--எத்தனை முத்துமாரி உலகத்து நாயகியே! - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கலகத் தரக்கர் பலர் - எங்கள் முத்து மாரியம்மா, எங்சள் முத்துமாரி! கருத்தினுள்ளே புகுந்துவிட்டார்- எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! பலகற்றும் பலகேட்டும் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! நின்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி துணிவெளக்க மண்ணுண்டு - எங்கள் முத்து மாரியம்பா, எங்கள் முத்துமாரி! தோல்வெளுக்கச் சாம்பருண்டு - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி மணிவெளுக்கச் சாணையுண்டு - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! மனம் வெளுக்க வழியில்லை - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! பேதமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! அணிகளுக்கொ ரேல்லையில்லாய் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! தேச முத்துமாரி. தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்துமாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்; கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீர்ப்பாய். எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி; ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன். சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும். ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்; யாதாநுந் தொழில் புரிவோம்; யாதுமவள் தருவாள். நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு: அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம். காணி நிலம். காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்; அங்கு தூணில் அழகியதாய் - நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்தினிடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிள நீரும், பத்துப் பன்னிரெண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போல - நிலாவொளி முன்பு வரவேணும்; அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும். பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும் - எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா நின்றன் காவலுற வேணும்; - என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையகத்தைப் பாலித்திட வேணும். நல்லதோர் வீணை. நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி? - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன் நசையறு மனங்கேட்டேன் -நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் தசையினத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? கிளி விடு தூது. பல்லவி. சொல்ல வல்லாயோ? - கிளியே! சொல்ல நீ வல்லாயோ? அனுபல்லவி. வல்ல வேல்முரு கன்தனை - இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று ுசொல்ல~ சரணங்கள். தில்லை யம்பலத்தே - நடனம் செய்யும் அமரர்பிரான் - அவன் செல்வத் திருமகனை - இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று - சொல்ல அல்லிக் குளத்தருகே - ஒருநாள் அந்திப் பொழுதினிலே - அங்கோர் முல்லைச் செடியதன்பாற் - செய்த வினை முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று - சொல்ல பாலை வனத்திடையே - தனைக் கைப் பற்றி நடக்கையிலே - தன் கை வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன விந்தை மொழிகளைச் சிந்தை செய் வாயென்று - சொல்ல கண்ணன் துதி. காயிலே புளிப்பதென்னே கண்ணப்பெருமானே!-நீ கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ நோன்பிலே உயிர்ப்பதென்னே! கண்ண பெருமானே! காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ண பெருமானே?-நீ கனலிலே சுடுவதென்னே, கண்ண பெருமானே! சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே - நீ திக்கிலே தெளிந்ததென்னே, கண்ண பெருமானே! ஏற்றிநின்னைத் தொழுவதென்னே, கண்ண பெருமானே!-நீ எளியர் தம்மைக் காப்பதென்னே! கண்ண பெருமானே! போற்றினாரைக் காப்பதென்னே! கண்ண பெருமானே!-நீ பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ட பெருமானே. வேறு போற்றி! போற்றி! போற்றி! போற்றி! கண்ண பெருமானே! - நின் பொன்னடி போற்றி நின்றேன், கண்ண பெருமானே கண்ணம்மாவின் காதல் காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு தூற்றினை யொத்த இதழ்களும் நில வூறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மடட்டிலும் - எனை வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் - காற்று நீயென தின்னுயிர் கண்ணம்மா - எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் போயின. போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினி லேயழு தூறுதே - கண்ணம்மா வென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் தீயினி லேவளர் சோதியே - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் - காற்று வெள்ளைத் தாமரை. ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். - வெள்ளைத் மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனத்தின் எழிலுடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். - வெள்ளைத் வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள் வெஞ்ச மர்க் குயிராகிய கொல்லர் வித்தை யோர்ந்திடு சிற்பியவ, தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீரமன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம். - வெள்ளைத் நவராத்திரிப் பாட்டு. மாதா பராசக்தி பராசக்தி. மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழிநீ சொல்லாய் எமதுயிரே வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்ேேவாமே. வாணி வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங்காட்டுவதாய் மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. ஸ்ரீதேவி பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. பார்வதி மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உச்சியிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே. ஆறு துணை. ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் - பராசக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி- ஓம் சக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம். கணபதி ராயன் - அவனிரு காலைப் பிடித் திடுவோம் குண முயர்ந்திடவே - விடுதலை கூடி மகிழ்ந் திடவே - ஓம் சக்தி சொல்லுக் கடங்காவே - பராசக்தி சூரத் தனங்க ளெல்லாம் வல்லமை தந்திடுவாள் - பராசக்தி வாழி யென்றே துதிப்போம். - ஓம் சக்தி வெற்றி வெடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ! - பகையே! துள்ளி வருகுது வேல் - ஓம் சக்தி தாமரைப் பூவினிலே - சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே - கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். - ஓம் சக்தி பாம்புத் தலைமேலே - நடஞ் செயும் பாதத்தினைப் புகழ்வோம் மாம்பழ வாயினிலே - குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம். - ஓம் சக்தி செல்வத் திருமகளைத் - திடங்கோண்டு சிந்தனை செய்திடுவோம் செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி திக்க னைத்தும் பரவும் - ஓம் சக்தி. கண்ணம்மா என் குழந்தை. பராசக்தியை குழந்தையாகக் கண்டு செல்லிய பாட்டு ராகம் - பைரவி. தாளம் - ரூபகம். ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப தநீத - பதப - பா பபப - பதப -பமா - கரிஸா ரிகம - ரிகரி - ஸா என்ற ஸவர கரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு மனோ பாவப்படி மாற்றிப் பாடுக~ சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலி தீ ர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய். பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா பேசும்பொற் சித்தரமே அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந்தேனே! ஓடி வருகையிலே - கண்ணம்மா உள்ளங் குளிரு தடீ ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ! உச்சி தனை முகந்தால் - கருவம். ஓங்கி வளரு தடீ! மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்கு தடீ! கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா உன்மத்த மாகு தடீ! சற்றுன் முகம் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ! உன்கண்டில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் உதிரங் கொட்டு தடீ! என் கண்ணிற் பாவையன்றோ - கண்ணம்மா என்னுயிர் நின்ன தன்றோ! சொல்லு மழையிலே - கண்ணம்மா துன்பக்கள் தீர்த்திடுவாய்; முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்ககந் தவிர்த்திடு வாய். இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமொர் தெய்வ முண்டோ? மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ? கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை. ராகம் - கேதாரம்; கண்டஜாதி தாளம் - ஏகதாளம். தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. - தீராத தின்னப் பமுங்கொண்டு தருவான் - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையன் என்றால் - அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். - தீராத தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன செய்தாலும் எட்டாக உயரத்தில் வைப்பான் மானொத்த பெண்ணடி என்பான் - சற்று மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். - தீராத அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை அழ அழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள் குழலிலே சூட்டுவேன்" - என்பான் - என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். - தீராத பின்னலைப் பின்னின்றி யிமுப்பான் - தலை பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான் வன்னப் புதுசேலை தனிலே - புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். - தீராத புள்ளாங் குழல் கொண்டு வருவான் - அமுது பொங்கித் ததும்பு நற்கீதம் படிப்பான் கள்ளால் மயங்குவது போலே - கதைக் கண்மூடி வாயமூ திறந்தே கேட்டிருப்போம். - தீராத அங்காந் திருக்கும் வாய் தனிலே - கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான் எங்காகிலும் பார்த்த துண்டோ - கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? - தீராத விளையாட வா வென் றழைப்பான் - வீட்டில் வேலை யென்றா லதைக் கேளா திழுப்பான் இளையாரோ டாடிக் குதிப்பான் - எம்மை இடையிற் பிரிந்து போய் வீட்டிலே சொல்வான். - தீராத அம்மைக்கு நல்லவன் கண்டீர் - மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கு மஃதே எம்மைத் துயர் செய்யும் பெரியோர் - வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் - தீராத கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பெய்மை சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன் ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில் அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். - தீராத கண்ணம்மா என் காதலி. காட்சி வியப்பு ராகம் - செஞ்சுருட்டி தாளம் - ஏகதாளம். சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ? வட்டக் கரிய விழி - கண்ணம்மா வானக் கருமை கொல்லோ ? பட்டுக் கரு நீலப் - புடவை பதித்த நல் வயிரம் நட்டநடு நிசியில் - தெரியும் நக்ஷத் திரங் ளடீ சோலை மல ரொளியோ - உனது சுந்திரப் புன்னகை தான் நீலக் கடலலையே - உனது நெஞ்சி லலைக ளடீ கோலக் குயி லோசை - உனது குரலி னிமை யடீ வாலைக் குமரி யடீ - கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா சாத்திர மேதுக் கடீ ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா சாத்திர முண்டோ டீ மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்பு செய்வோம்: காத்திருப் பேனோடீ - இதுபார் கன்னத்து முத்த மொன்று.